இலங்கை கைப்பற்றிய புலிகளின் ஆயுதக் கப்பல் - கொழும்பு கொண்டு வரப்பட்டது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: பிரின்சஸ் கிறிஸ்டினா என்ற பெயரிலான விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் மூலம்தான் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொண்டு வந்ததாக இலங்கை கடற்படை கூறுகிறது.
இந்தக் கப்பல் மிக நீளமானது, புலிகளிடம் இருந்த கப்பல்களிலேயே இதுதான் நீளமானதாம். கேபியிடமிருந்து கறந்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
89 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் மூலம் ஆயுதங்களை மட்டுமல்லாமல் வீரர்களையும் அனுப்பி வந்துள்ளனர் புலிகள் என்று தெரிகிறது.
இந்தக் கப்பல் தவிர மேலும் 4 கப்பல்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இவற்றில் இதுவரை 3 கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications