டிச.25 முதல் ஜன.1 வரை யாஹூ அலுவலகங்கள் மூடல்!

ஏற்கனவே நூற்றுக்கணக்கானேரா வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிய யாஹூ, தற்போது செலவு குறைப்பு நடவடிக்கையாக இந்த விடுமுறை திட்டத்தை அறிவித்துள்ளது.
அத்தியாவசியமான பணிகள் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பிட்ட இந்த காலகட்டத்திற்கு நிறுத்திவைக்கப்பட உள்ளது.
சர்வதேச பொருளாதார நிலை நெருக்கடியை சந்திக்கும் சமயங்களில் பாதிப்பில் இருந்து தப்ப, யாஹூ மேற்கொண்டிருக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை, செலவு குறைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளில் ஒரு பகுதியே இந்த கட்டாய விடுமுறை திட்டம்.
'மந்தமான சமயங்களில் அலுவலகத்தை மூடி, பணியாளர்களையும் சுதந்திரமாக விடுவதன் மூலம், அலுவலக நடைமுறை செலவுகள் குறைவதோடு, பணியாளர்களை ரீ-சார்ஜ் செய்தது போலவும் ஆகும்' என்று யாஹூ செய்தித் தொடர்பாளர் டானா லெங்கீக் விளக்கம் தந்துள்ளார்.
விடுமுறை கால சம்பள விவகாரங்கள் எல்லாம் அந்தந்த பகுதியில் பின்பற்றப்படும் உள்ளூர் சட்டவிதிகளின் படி தீர்மானிக்கப்படும் என்றும் லெங்கீக் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications