700 அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு காக்னிஸன்ட்டில் வேலை!

Subscribe to Oneindia Tamil

Cognizant
சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான காக்னிஸன்ட் 700 புதிய வேலைவாய்ப்புகளை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் உருவாக்கித் தருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்த பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிலிருந்தே இந்த 700 பணியிடங்களுக்கும் பொருத்தமானவர்களைத் தேர்வு செய்துள்ளது காக்னிஸன்ட்.

இதற்காக இரண்டுநாள் வளாக நேர்காணல் நடத்தி, இளநிலைப் பட்டம் பயிலும் மாணவர்கள் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் என அனைத்துத் தரப்பினரிலிருந்தும் இந்த 700 புதிய பணியாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து காக்னிஸன்ட் நிறுவன வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவர் ஆர் ராம்குமார் கூறுகையில், அண்ணா பல்கலைக் கழகம் எங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக எங்களின் திறமையான பணியாளர்களை இங்கிருந்தே தேர்வு செய்து வருகிறோம்..." என்றார்.

தேர்வு செய்யப்பட்ட 700 மாணவர்களின் பட்டியலை நேற்று அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹரிடம் அளித்த ராம்குமார், "காக்னிஸன்ட் நிறுவனம் சர்வதேச அளவில் மற்ற நிறுவனங்களுக்கு சரியான போட்டியாளராகத் திகழ்வதில் இந்த பெருமைக்குரிய பல்கலைக் கழகத்துக்கும் பங்குண்டு" என்றார்.

கம்ப்யூட்டர் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலிருந்தும் தேவைப்படும் மாணவர்களை இந்த வளாகத் தேர்வில் தேர்வு செய்துள்ளது காக்னிஸன்ட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+