போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: திமுக
பென்னாகம் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - அன்பழகன்
சென்னை: பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போட்டியிட விரும்பும் திமுகவினர் விண்ணப்பங்களைத் தரலாம் என அக்கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வருகிற 20.1.2010 அன்று நடைபெற உள்ள பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், போட்டியிட விரும்புகின்றவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 26.12.2009 சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.5 ஆயிரம். விண்ணப்ப படிவத்தை ரூ.500 வீதம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications