என் கணவர் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம்- சாமியார் மனைவி

Subscribe to Oneindia Tamil

Lalitha Sreekumar
சென்னை: சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம். அதனால்தான் இந்த பாடு படுத்துகிறார் போலும் என்று கூறியுள்ளார் ஸ்ரீகுமாரின் மனைவி லலிதா.

சென்னை காம்தார்நகரை சேர்ந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார். இவர் மீது தேனாம்பேட்டை கிரியப்பா தெருவை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கூறினார். இந்தப் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு வருமாறு சாமியாரை அழைத்தும் அவர் வராமல் டேக்கா கொடுத்து வருகிறார். இதனால் அவருக்கு கெடு விதித்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் தனது கணவர் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம். அதனால்தான் இவ்வாறு செய்கிறாரோ என்று கூறியுள்ளார் சாமியாரின் மனைவி லலிதா.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

குருஜி தவறு ஏதும் செய்யவில்லை என்றாலும் பெண்களுக்கு சட்டத்தில் சாதகமான இடம் உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் கூறுவது உண்மையா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம்.

ஹேமலதாவுக்கு பின்னணியில் நிலஅபகரிப்பு கும்பல் ஒன்று உள்ளது. அவர்களின் பணம் தான் அவரை கோர்ட்டு, போலீஸ் நிலையம் என்று பேச வைக்கிறது.

ஒரு பெண் சாதாணமாக கற்பழிப்பு புகார் கொடுக்க முடியாது. ஒருவேளை குருஜி மேல் ஹேமலதாவுக்கு விருப்பம் (காதல்) ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.

குருஜி நல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவரை கைது செய்ய வைத்தே தீருவேன் என்று ஹேமலதா கூறி வருவதில் இருந்தே அவரது உள்நோக்கம் என்ன என்று புரிகிறது.

அவரது பின்னணியில் உள்ள நிலஅபகரிப்பு கும்பலின் சதி தான் இந்த அவதூறு வழக்கு. சில சட்ட காரணங்களால் குருஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை என்றார் லலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+