கோவை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை அருகே பிஷ் பிளேட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், சரக்கு ரயில் தடம் புரண்டது. இதில் 6 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி விட்டன.
கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் வெள்ளளூர் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென பலத்த சப்தத்துடன் ரயில் தடம் புரண்டது.
இதையடுத்து 6 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி விட்டன.
தகவல் அறிந்ததும் ரயில்வே போலீஸார் விரைந்து வந்தனர். தண்டவாளத்தைப் பார்த்தபோது 12 இடங்களில் அது உடைந்திருந்தது தெரிய வந்தது. பிஷ் பிளேட்டுகள் கழன்றிருந்தன.
இதனால் சதி வேலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications