மதுரை: 21 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் 21 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை திருநகர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு பெண் நின்றிருந்தார்.
அவரிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். சோதனை செய்த போது அவரிடம் 21 கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அவர் மதுரை கீழக்குயில் குடியைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி சுந்தரி (28) என்பதும், கஞ்சா விற்பதற்காக அங்கு வந்தும் தெரியவந்தது.
சுந்தரியை கைது செய்த போலீசார், அவருடன் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications