ராமதாசுக்கு 'ஓ' போட்ட வாக்காளர்கள்!

இதன்மூலம் இந்த இடைத் தேர்தலில் பாமகவினர் 'ஓ' படிவத்தைப் பயன்படுத்துவார்கள் என்று அறிவித்த அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் 'அரசியல் பலம்' என்ன என்பதும், அவரது பேச்சுக்கு தமிழக மக்களிடையே உள்ள மதிப்பும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி வாக்கு எண்ணிக்கையை வீடியோ கான்பரன்சிங் மூலம், சென்னையிலிருந்தபடி கண்காணித்தார் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா.
இந்த இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. வாக்குகள் எண்ண்பபட்ட ஒவ்வொரு மேஜையிலும் ஒரு வெப் கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் இந்த வெப் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு சென்னை கோட்டையில் உள்ள வீடியோ கான்பரன்சிங் அறையில் நேரடியாக ஒளிபரப்பானது. அதை தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பார்வையிட்டு வாக்கு எண்ணிக்கையை சென்னையில் இருந்தபடியே நேரடியாகக் கண்காணித்தார்.
ஒரு தபால் ஓட்டு கூட இல்லை...
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேஷ் குப்தா, இரு தொகுதிகளிலும் ஒரு தபால் ஓட்டு கூட பதிவாகவில்லை.
அதேபோல வாக்களிக்க விருப்பமில்லை என்பதைத் தெரிவிக்கும் '49 ஓ' விண்ணப்பத்தையும் மிகக் குறைந்த வாக்காளர்களே பயன்படுத்தியுள்ளனர்.
மொத்தமே 38 'ஓ'!
இந்த விண்ணப்பத்தை திருச்செந்தூரில் 17 பேரும், வந்தவாசியில் 21 பேரும் மட்டும் பயன்படுத்தியுள்ளனர்.
திருச்செந்தூரில் 14ம் நம்பர் வாக்குச் சாவடியில் அதிகப்பட்சமாக 92.93 சதவீதமும், 18ம் எண் டபிள்யூ மையத்தில் 90.97 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
24 வாக்குசாவடிகளில் 85 முதல் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஹஜ் சென்றதால் இஸ்லாமியர்கள் வாக்குகள் குறைவு..
திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட காயல்பட்டினத்தில் ஏராளமான முஸ்லிம் வாக்காளர்கள் ஹஜ் புனித யாத்திரை சென்றுள்ளதால் அங்கு வாக்குப்பதிவு குறைவாக இருந்தது.
அங்கு 61ம் நம்பர் வாக்குசாவடியில் மிக குறைந்தபட்சமாக 46.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
வந்தவாசி தொகுதியில் 10 வாக்குசாவடிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. அங்கு எண் 100-டபிள்யூ வாக்குசாவடியில் மட்டும் குறைந்தபட்சமாக 72.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என்றார்.
ராமதாஸை கண்டுக்காத பாமகவினர்:
வன்னியர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் வந்தவாசி தொகுதியில், வெறும் 21 பேர் மட்டுமே 49ஓ விதிமுறையை பயன்படுத்தியுள்ளது பாமகவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் யாருக்கும் பாமகவினர் வாக்களிக்கக் கூடாது. மாறாக 49 ஓ விதியைப் பயன்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவுக்கு பாமகவினர் எவ்வளவு தூரம் மரியாதை தந்துள்ளனர் என்பது இந்தத் தேர்தலில் தெளிவாகிவிட்டது.
இதன் மூலம் மொத்தமே 21 பாமகவினர்தான் வந்தவாசியில் இருக்கிறார்களா என்று திமுகவினர் நக்கலடித்தனர்.












Click it and Unblock the Notifications