நெல்லை-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவங்கியது
நெல்லை: நெல்லை-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலை சென்னையி்ல் இருந்தபடி முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பிரான்ஸ் வசதி மூலம் தொடங்கி வைத்தார்.
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, கன்னியாகுமரி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ், நெல்லை வரை நீட்டிக்கப்பட்ட ஜம்முதாவி-மதுரை எக்ஸ்பிரஸ், நெல்லை-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய 4 ரயில்களுக்கான துவக்க விழா நேற்று நடந்தது.
நெல்லை-பிலாஸ்பூர் எக்ஸ்பிரசை வீடியோ கான்பிரான்ஸ் மூலம் முதல்வர் கருணாநிதி நேற்று மாலை 5.45 மணிக்கு துவக்கி வைத்ததும் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்றது.
நெல்லையில் நடந்த துவக்க விழாவி்ல் ராமசுப்பு எம்.பி, கோட்ட முதன்மை வாணிக மேலாளர் ஓசியா சாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நெல்லையில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்(2788), சனிக்கிழமை நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை இரவு 9.35 மணிக்கு பிலாஸ்பூரை சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில் (2787) இந்த ரயில் செவ்வாய் கிழமை காலை 8.10 மணிக்கு பிலாஸ்பூரில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை அதிகாலை 5.05 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.












Click it and Unblock the Notifications