சபரிமலை- 4 நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு
சபரிமலை: சபரிமலையில் 4 இடங்களில் நாட்டு குண்டுகள் வெடித்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 26ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரம்குத்தி மற்றும் சுவாமி ஐயப்பன் ரோட்டில் 3 இடங்களில் நாட்டு வெடி குண்டுகள் வெடித்தன.
அரை மணி நேர இடைவெளியில் மீண்டும் தெளிக்குழி மற்றும் செளிக்குழி பகுதிகளில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. காட்டு வழியி்ல் யானைகள் கூட்டத்தை விரட்டுவதற்காக பக்தர்கள் நாட்டு வெடி குண்டுகளை வெடிப்பது வழக்கம்.
ஆனால் இப்பகுதியில் குண்டு வெடித்தது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள போலீசாருக்கு கூடுதல் டி.ஜி.பி. சந்திரசேகரன் உத்தரவிட்டார். பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டது.
பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பல இடங்களில் பெரிய கயிறுகளை கட்டி போலீசார் பக்தர்களை தடுத்து நிறுத்தி, தீவிர சோதனைக்குப்பிறகே பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications