தமிழகத்தில் மேலும் நான்கு புதிய தாலுகாக்கள்!
சென்னை: தமிழகத்தில் நான்கு புதிய வட்டங்கள் (தாலுகாக்கள்) அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பு...
தமிழக சட்டப் பேரவையில் கடந்த 30.6.2009 அன்று நடைபெற்ற, வருவாய்த்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அரசு வெளியிட்ட அறிவிப்புகளின்படி வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஆம்பூர் வட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தை இரண்டாகப் பிரித்து மடத்துக்குளத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக மடத்துக்குளம் வட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டத்தை மூன்றாகப் பிரித்து, ஆலந்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஆலந்தூர் வட்டம்.
சோழிங்கநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக சோழிங்க நல்லூர் வட்டம் அமைக்கப்படுகிறது.
செங்கற்பட்டு வருவாய்க் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து, தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கித் தாம்பரத்தைத் தலைமையிடமாக கொண்டு தாம்பரம் வருவாய்க் கோட்டம்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வருவாய்க் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய வட்டங்ளை உள்ளடக்கி உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிதாக உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டம்.
என நான்கு புதிய வட்டங்களையும், இரண்டு புதிய வருவாய்க் கோட்டங்களையும் உருவாக்கி முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications