தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 8 போலீஸ் சூப்பிரண்டுகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவி்ட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, சென்னையில் உள்ள மாநில திருட்டு வி.சி.டி தடுப்பு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
திருட்டு வி.சி.டி. தடுப்பு போலீஸ் சூப்பிரண்டாக உள்ள மகேஸ்வரி, சி.பி.சி.ஐ.டி சூப்பிரண்டாக பொறுப்பேற்பார். சி.பி.சி.ஐ.டி சூப்பிரண்டு அருண் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஜெயகவுரி போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக மாற்றப்பட்டுள்ளார். போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக இருக்கும் சோனல் மிஸ்ரா, மத்திய சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி, திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டாக பொறுப்பேற்பார். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சின்னச்சாமி சென்னை கொள்ளைத் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகவேல், தென் சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பதவி ஏற்பார். திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் ராஜேந்திரன் கன்னியாகுமரி மாவட்ட புதிய சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications