உல்லாசத்துக்கு இடைஞ்சல்-குழந்தையை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
சென்னை: கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த குழந்தையை பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பெண்ணுடன் உடலுறவுகொள்வதற்கு தடையாக இருந்த அந்தப் பெண்ணின் குழந்தையை எரித்துக் கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை விரைவு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திருச்சியைச் சேர்ந்தவர் அமுதா, வயது 25. இவர் கணவனைப் பிரிந்து தனது 4 வயது பெண் குழந்தையான தனத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இவர் சென்னையில் குப்பை அள்ளும் வேலை செய்து வந்தார்.
சென்னை, துரைப்பாக்கம் கண்ணகிநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகேசனுடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்தாண்டு நவம்பர் மாதம் இரவு ஆட்டோ டிரைவர் முருகேசன், அமுதாவை மயிலாப்பூரில் உள்ள ராஜரத்னம் பூங்காவுக்குள் அழைத்துச் சென்றார்.
அப்போது தன் குழந்தையையும் அமுதா உடன் அழைத்துச் சென்றார். பூங்காவுக்குள் முருகேசனும், அமுதாவும் உல்லாசமாக இருந்தனர்.
அப்போது அருகில் இருந்த குழந்தை, திடீரென உரத்த குரலில் அழத்தொடங்கியது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் குழந்தையுடன் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலைக்கு அவர்கள் வந்தபோது, சித்ராவை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு, குழந்தை தனத்தை மட்டும் உட்காரவைத்து ஆட்டோவை முருகேசன் ஓட்டிச் சென்றார்.
தேனாம்பேட்டை சீத்தாம்மாள் காலனி பிரதான சாலை அருகே வந்து ஆட்டோவில் இருந்த பெட்ரோலை எடுத்து குழந்தையின் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார் முருகேசன். குழந்தை தீயில் கருகி இறந்தது.
அதிகாலை அங்கு வந்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி முருகேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிந்து சென்னை 3வது விரைவு கோர்ட்டு நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். குழந்தையை முருகேசன் கொடூரமாக கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications