செவ்வாய் கிரகத்திற்கு குரங்கை அனுப்ப ரஷ்யா திட்டம்!

செவ்வாயில் மனிதன் வசிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யா, முதன் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு ஒரு உயிரினத்தை அனுப்பி வைத்து ஆராயவுள்ளது.
அந்த உயிரினம் ஒரு குரங்கு. இதுகுறித்து ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனம் ஒன்று கூறுகையில், செவ்வாய் கிரகத்திற்கு குரங்கு ஒன்றை அனுப்பி வைக்க ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக ரஷ்ய விண்வெளி ஆய்வு அகாடமியுடன் தொடர்பு கொண்டுள்ளோம்.
முன்பு நாங்கள்தான் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்குத் தேவையான குரங்குகளை சப்ளை செய்துள்ளோம். தற்போதும் நாங்களே செவ்வாய் செல்லவுள்ள குரங்கையும் சப்ளை செய்யவுள்ளோம் என்றனர்.
முதலில் ஒரு குரங்கு மட்டும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து ஒரு ரோபோட் அனுப்பி வைக்கப்படும். இந்த ரோபோட்தான், குரங்குக்குத் துணையாக செவ்வாய் கிரகத்தில் இருக்கும்.
குரங்கைக் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டுவது வரை அனைத்தையும் இந்த ரோபோட்டே பார்த்துக் கொள்ளுமாம். குரங்கும், ரோபோட்டும் 520 நாட்கள் செவ்வாயில் இருப்பார்கள்.
குரங்கைக் கவனித்துக் கொள்ளும் வகையிலான ரோபோட்டை உருவாக்குவது கடினமான காரியமே அல்ல. உண்மையில் கஷ்டமான சமாச்சாரம் என்னவென்றால், குரங்குக்கு, அந்த ரோபோட்டுடன் பழக கற்றுக் கொடுப்பதுதான். ரோபோட்டுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரைவில் குரங்குக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications