தமிழக பஸ் எரிப்பு வழக்கு- சுபியா மதானிக்கு நிபந்தனை ஜாமீன்
Subscribe to Oneindia Tamil

எர்ணாகுளம் செஷன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு சுபியா மனு செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி பாப்பச்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி பாப்பச்சன், ரூ. 1 லட்சம் ஜாமீன் உத்தரவாதம், அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதம் அளித்து ஜாமீனில் செல்லலாம் என உத்தரவிட்டார்.
மேலும், எர்ணாகுளம் செஷன்ஸ் கோர்ட் எல்லையைத் தாண்டிச் செல்லக் கூடாது. தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கக் கூடாது என்று நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications