செம்மொழி மாநாடு-கண்காட்சி அமைக்க ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கண்காட்சி அமைப்பு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் ஜுன் 23 முதல் 27 வரை நடைபெற உள்ளது. மாநாட்டில் அமைக்கப்பட உள்ள கண்காட்சி அரங்குகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் என்.செல்வராஜ், தொல்லியல் துறை ஆணையர் ஸ்ரீ.ஸ்ரீதர், கணபதி ஸ்தபதி, வசந்தி ஸ்டான்லி எம்.பி, கோபண்ணா, கவிஞர் மு.மேத்தா, கவிஞர். பா.விஜய், தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம், கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications