ஆந்திரா கலவரம்-தமிழக போலீஸ் விரைந்தது
சென்னை: ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் மீண்டும் வலுப்பெற்றுள்ள நிலையில், துணை ராணுவப்படையினருடன் 4 கம்பெனி தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் வலுத்துள்ளதால், அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத கலவரங்களை சமாளிக்க ஆந்திர போலீஸ் அதிகாரிகள் தமிழக போலீசின் உதவியை நாடியுள்ளனர்.
ஆந்திராவின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு 4 கம்பெனி (400) போலீஸ் படையை அனுப்பி வைத்துள்ளது.
கண்ணீர் புகை குண்டுகள் உள்ளிட்ட உபரணங்களுடன் அவர்கள் ஹைதராபாத், விஜயவாடா, வாரங்கல் உள்பட பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே ஆந்திராவில் மத்திய அரசு ராணுவத்தையும் அனுப்பி வைத்துள்ளது. 1,150 துணை ராணுவப் படையினர் ஆந்திரா விரைந்துள்ளனர்.
இது தவிர ஜலந்தர், சண்டிகார் ஆகிய இடங்களில் இருந்து 10 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 28 கம்பெனி ஆந்திராவில் முகாமிட்டு உள்ளது. இப்போது கூடுதலாக ரிசர்வ் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் 38 கம்பெனி ஆந்திரா சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications