தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் ஜனவரி 4 முதல் 'ஸ்டிரைக்'

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்கள் வரும் ஜனவரி 4ம் தேதி முதல காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளனர்.

அகில இந்திய அளவில் துறைமுக தொழிலாளர்களுக்கான புதிய சம்பள பேச்சுவார்த்தை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடந்தது.

இதில் 23 சதவீத சம்பள உயர்வும், ஓப்பந்தகாலம் 3 ஆண்டுகள் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் சம்பள நிலுவைத் தொகை 2007 ஜனவரி மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவில்லை.

நிலுவைத் தொகையை 2009 ஜனவரியில் இருந்து கணக்கிட்டு வழங்குவதாக நிர்வாகம் கூறியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் துறைமுக தொழிலாளர்கள் சங்கங்கள் ஜனவரி 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

தூத்துக்குடி துறைமுகம் மற்றும் 'டாக்' தொழிலாளர்கள் துறைமுக வளாகத்தில் உள்ள வஉசி சிலை முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று துறைமுக சபை தலைவர் ராவிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+