பென்னாகரத்தில் 58,000 வாக்காளர்கள் நீக்கம் - பாமக குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
பென்னாகரம்: பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 58 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம் சாற்றியுள்ளது.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தர்மபுரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலாக்கம் குறித்த ஆலோசனை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில், திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் உள்ளூர் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 58 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டரிடம் பாட்டாளி மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும், இந்த கூட்டத்தில் இருந்து பாமக பிரதிநிதிகள் வெளிநடப்பும் செய்தனர்.












Click it and Unblock the Notifications