பாலிவுட் பாணியில் நிற்க வைத்து கையில் போலீஸார் சுட்டனர் - கசாப்
மும்பை: சினிமாவில் வருவது போல என்னை நிற்க வைத்து, கையை மேலே தூக்கி காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் சுட்டனர் என்று கூறியுள்ளான் அஜ்மல் கசாப்.
மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் ஈஸ்ட்மென் கலரில் விதம் விதமான கதைகளுடன் வாக்குமூலம் அளித்து வருகிறான் கசாப்.
ஒவ்வொரு நாளும் ஒரு கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறான்.
நேற்று அவன் நீதிபதி தஹியானியிடம் கொடுத்த வாக்குமூலம்...
கிரகாம் செளபாத்தி பகுதியில் என்னை போலீஸார் சுட்டதால்தான் நான் காயமடைந்தேன் என்று போலீஸார் கூறுவதில் உண்மை இல்லை.
உண்மையில் என்ன நடந்தது என்றால், போலீஸார் என்னைக் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று, நிற்க வைத்து கையைத் தூக்கச் சொல்லி கையில் சுட்டனர். நீங்கள் கூட இப்படிப்பட்ட காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்பீர்களே, அப்படித்தான் என்றான்.
இதைக் கேட்டதும் கோர்ட் ஹாலில் சிரிப்பலை எழுந்தது. நீதிபதி குறுக்கிட்டு, நான் சினிமாவே பார்ப்பதில்லை என்று கசாப்பைப் பார்த்துக் கூறினார்.












Click it and Unblock the Notifications