மாணவிகளிடம் சில்மிஷம் - ஆசிரியருக்கு செருப்பு மாலை

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட கணித ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்து கட்டி வைத்து அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜானகிராமன்.

ஆசிரியர் ஜானகிராமன், பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுத்தது. மேலும் அவரது செல்போனில் செக்ஸ் படங்களை மாணவிகளிடம் காட்டி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகின்றது.

இதனால், அவரால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள், இது குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், விடுமுறையில் சென்ற ஆசிரியர் ஜானகி ராமன் மீண்டும் பள்ளிக்கு வந்தை அறிந்த பொது மக்கள் ஆசிரியர் ஜானகிராமனை அடித்து உதைத்து ரோட்டிற்கு இழுத்து வந்து, மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து அடித்தனர்.

சிறி்து நேரத்தில், ஆசிரியர் ஜனாகிராமனை பொதுமக்கள் பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜானகிராமனை கைது செய்தனர்.

இந்த நிலையில் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வை.பாலமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+