தெலுங்கானா போராட்டம்: ரயில் பாதைகள் சேதம்- 70 ரயில்கள் ரத்து
ஹைதராபாத்: தெலுங்கானா போராட்டக்காரர்களால் பெரும்பாலான ரயில்வே பாதைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதால் இன்று ஆந்திராவில் 70 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தென் மத்திய ரயில்வே தலைமை செய்தித் தொடர்பு அதிகாரி சந்திரிமா ராய் கூறுகையில், தெலுங்கானா பந்த்தின்போது பெருமளவிலான ரயில் பாதைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சிக்னல் சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு முக்கிய உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக 70 நெடுந்தொலைவு மற்றும் குறுகிய தொலைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார்.
செகந்திரபாத் -காசிப்பேட்டை, காசிப்பேட்டை- டோர்னகல், காசிப்பேட்டை- பல்லரஷா, செகந்திராபாத்- முத்கேத், செகந்திராபாத் - மகபூப்நகர் பிரிவிலும், பிற பகுதிகளிலும் ரயில்கள் ஓடாது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்களை இயக்குவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிக்னல் கருவிகள் சேதம் மட்டும் ரூ. 1 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சேதங்களை எங்களால் தாங்க முடியாது.
பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு சில காலம் பிடிக்கும் என்றார் ராய்.












Click it and Unblock the Notifications