2,300 பேரை நீ்க்குகிறது ஏஓஎல்!
Subscribe to Oneindia Tamil

இந்த நடவடிக்கையின் மூலம் மட்டும் 200 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்த முடிவு செய்துள்ளது ஏஓஎல். கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்திய நாள் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதுகுறித்த முறையான தகவல்களை அமெரிக்க பங்கு கட்டுப்பாட்டு மையத்திடமும் அளித்துள்ளது ஏஓஎல்.
சமீபத்தில்தான் ஏஓஎல் நிறுவனம் முழுமையான, தனி நிறுவனமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பின் நடந்த முதல் இயக்குநர் குழு கூட்டத்தில் அதன் சிஇஓ டிம் ஆம்ஸ்ட்ராங் பங்கேற்றார்.
ஏஓஎல் நிறுவனத்தில் இப்போது 7000 பேர் பணியில் உள்ளனர். நிறுவனத்தை மறு நிர்மாணம் செய்யும் நோக்கில் இவர்களில் மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களை நீக்குவதோடு, பல ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications