இலங்கையில் இந்திரா பல்கலை-மத்திய அரசு திட்டம்
திருவண்ணாமலை: இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியி்ல் இந்திராகாந்தி பல்கலைக்கழகம் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அக் கட்சியின் எம்.பியான சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
திருவண்ணாமலையில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அங்கு தேர்தல் நடக்க உள்ளதால் அந்த திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அது பிப்ரவரி மாதம் மீண்டும் துவங்கப்படும்.
வரும் 2010ம் ஆண்டு ஆகஸ்டு 31 ம் தேதிக்குள் இலங்கை முகாமில் உள்ள தமிழர்கள் அவர்களின் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள். அதன் பிறகு அங்குள்ள முகாம்கள் மூடப்படும்.
இலங்கை தமிழர் பகுதிகளில் விவசாயத்தை பெருக்க விதை, மருந்து, விவசாய கருவிகள் வழங்கப்படும்.
யாழ்ப்பாணம் மாணவர்கள் கல்வியை மேம்படுத்த அங்கு இந்திராகாந்தி பல்கலைக்கழகம் நிறுவும் திட்டமும் உள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து துவங்க திட்டம் தயரா செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications