'சுனாமி நாளில்' இந்தோனேசிய கடலில் கடும் பூகம்பம்
சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் சமுலகி பகுதியில் கடலில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் ரிக்டர் அளவு 6 ஆக பதிவாகியுள்ளது. சமுலகியின் வடக்கு வட மேற்கில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சமுலகி பகுதி, டனிம்பார் தீவில் அமைந்துள்ளது.
கடலில் 56 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், உள்ளூர் நேரப்படி காலை 8.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
முதலில் நிலநடுக்கத்தின் அளவு 6.2 ஆக கூறப்பட்டது. பின்னர் இது 6 என்று திருத்திக் கூறப்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தோனேசிய அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை எதையும் பிறப்பிக்கவில்லை.
அந்தமானும் அதிர்ந்தது...
இதேபோல வடக்கு அந்தமானிலும் இன்று காலை லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக இருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன. மக்கள் பீதியடைந்து ஓடினர். இருப்பினும் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏதும் இல்லை.
கடந்த 2004ம் ஆண்டு இதே டிசம்பர் 26ம் தேதி தான் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகி இந்தியா உள்பட பல நாடுகளில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications