புத்தாண்டு: கலாட்டா செய்தால் பாடம் புகட்டுவோம்- இந்து முன்னணி எச்சரிக்கை
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரி்ல் நள்ளிரவில் அட்டகாசம் செய்வதை தடுக்க டிசம்பர் 31ம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆங்கிலப் புத்தாண்டு கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான பண்டிகை. இதற்காக அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை இந்த முன்னணி தெரிவித்துக் கொள்கிறது.
ஆனால், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரி்ல் நள்ளிரவில் குடித்துவிட்டு கும்மாளம் போடுவதையும், பைக் ரேஸ் விடுவதையும், நடு இரவில் பட்டாசு வெடிப்பதையும், போதையோடு ரோட்டில் நின்று கொண்டு புத்தாண்டு வாழ்த்து சொல்வதுபோல் பெண்களின் கைகளை பிடித்து இழுப்பதையும், இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாரத நாட்டின் பாரம்பரியத்துக்கேற்ப அமைதியான வழியில் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுக்கிறது.
இந்துக்களின் புத்தாண்டு எப்படி அமைதியாக ஆன்மீக ரீதியாக கொண்டாடப்படுகிறதோ அது போல் தான் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட வேண்டும்.
இதற்கு மாறாக நள்ளிரவில் கலாட்டா செய்பவர்களை கண்டால், இந்து முன்னணி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி தக்க பாடம் புகட்டுவார்கள் என்று இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கிறது.
மாநில அரசும், காவல்துறையும் புத்தாண்டு தினத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும் டிசம்பர் 31ம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும்.
நள்ளிரவு ஆபாச நடனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications