பனிமூட்டம்-வட மாநிலங்களில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
டெல்லி: டெல்லி உள்பட வட மாநிலங்களி்ல் கடும் பனி மூட்டத்தால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று அதிகாலை நிலவிய கடும் பனி மூட்டத்தால் ஆந்திர பிரதேச எக்ஸ்பிரஸ், வைசாலி எக்ஸ்பிரஸ், லக்னோ மெயில் உள்பட பல முக்கிய ரயில்கள் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
எனினும் பனி மூட்டம் காரணமாக விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
டெல்லியில் இன்று காலை 5.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையே காணப்பட்டது. மிக குறைந்தபட்சமாக நேற்று 5.2 டிகிரி பதிவாகியிருந்தது. சராசரியாக 5ல் இருந்து 21 டிகிரி வரை வெப்பநிலை டெல்லியில் பதிவாகிவருகிறது.
கோல்கத்தாவிலும் வெப்பநிலை 11.4 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு குறைந்துள்ளது. சண்டிகரில் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று 4.2 டிகிரி செல்ஷியஸ் வரை வந்திருந்தது.
ஜம்மு காஷ்மீரில் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 1.1 டிகிரி வரை செல்கிறது. ஜம்முவின் பனிஹால் நகரில் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 1.1 டிகிரியாகவும், படோடியில் 2 டிகிரியாகவும் பதிவாகியிருந்தது.
பல இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே பதிவாகின. நேற்று ஸ்ரீநகரில் அதிகப்பட்ச வெப்பநிலையே 7.2 டிகிரி தான். தெற்கு காஷ்மீரின் காஸிகாத் நகரில் நேற்று அதிகப்பட்ச வெப்பம் 10.1ஆக இருந்தது இன்று 4.7 டிகிரியாக குறைந்துள்ளது.
எனினும் காஷ்மீரில் தற்போதைய பனிப்பொழிவு முந்தைய காலகட்டங்களைக் காட்டிலும் குறைவு என்றே கருதப்படுகிறது.
வழக்கமாக குளிர்காலங்களில் காஷ்மீர் பகுதிகளில் 40 நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கும். ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மார்க் போன்ற பகுதிகளில் ஏழு முதல் எட்டு அடி வரை உயரத்திற்கு பனி பொழிந்துகிடக்கும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தளவில் கணிசமான மாற்றங்கள் தெரிவதாகவும், புவிவெப்ப அதிகரிப்பின் விளைவாக பனிப்பொழிவு குறைந்து வருவதாகவும் சுற்றுச்சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குழாய்களில் தண்ணீர் வராமல் உறைந்துபோவது, நீர்நிலைகள் கெட்டியாவது, சாலைகள் ஐஸ்கட்டிகளாவது போன்றவை பருவகால காட்சிகள். ஆனால் சமீபத்திய பருவங்களில் இவை குறைந்து வருவதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications