மூளைச் சாவு-15 வயது மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த வீரப்பன்-லட்சுமி தம்பதியின் மகள் ஜெயபாரதி (15), பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக இவர் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 23ம் தேதி ஜெயபாரதிக்கு தலைவலி கடுமையானதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் ஜெயபாரதியின் மூளையை பரிசோதனை செய்தபோது, மூளை நரம்பில் ரத்த கசிவு ஏற்பட்டு அபாயகரமான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் ஜெயபாரதி மூளைச் சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விவரத்தை ஜெயபாரதியின் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். கடும் அதிர்ச்சியடைந்த போதிலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஜெயபாரதியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் ஜெயபாரதியின் உடலில் இருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண் போன்ற உறுப்புகளை எடுத்தனர். இந்த உறுப்புகள் அனைத்தும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளன.
இதுகுறித்து ஜெயபாரதியின் உறவினர்கள் கூறுகையில், 'ஜெயபாரதியின் மூளை செயல் இழந்து விட்டதாகவும், அவளது உடலை பிற நோயாளிகளுக்கு தானம் செய்யலாம் என்றும் டாக்டர்கள் கூறினார்கள்.
உறுப்புகளை வசதி படைத்தவர்களுக்கு வழங்க எங்களுக்கு விருப்பம் இல்லை. இதனால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஏழை நோயாளிகளுக்கு உறுப்புகளை தானம் செய்யலாம் எனக் கூறினோம்' என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications