சாதியை ஒழிக்கவே சமத்துவபுரங்கள்- மு.க.ஸ்டாலின்

ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் அடுத்த அஞ்சானூரில் 9 ஏக்கர், 7 சென்ட் நிலப்பரப்பில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் 3வது சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இதை ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'சமத்துவபுரம் பெரியார் கண்ட கனவு. ஒருவரை அடையாளம் காண வேண்டும் என்றால் சாதியுடன் பெயரை சொல்லிதான் அடையாளம் காண வேண்டிய நிலையில் உள்ளோம்.
இந்த நிலை மாறி நாம் அனைவரும் தமிழன்- மனிதன் என்ற நிலை இந்த நாட்டில் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
நாட்டில் மேல் சாதி, கீழ் சாதி என்று இருக்க கூடாது. சாதி என்பது சதியின் காரணமாக ஒரு கால் முளைத்து சாதியாகி விட்டது. அதுபோல தி என்பது கொம்பு முளைத்து 'தீ'யாக கொளுந்து விட்டு எரியக் கூடிய நிலை ஏற்படுகிறது. இதை அகற்றுவதற்கு தான் சமத்துவபுர திட்டம்.
கடந்த ஆட்சி காலத்தில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அப்போது சமத்தவபுரத்தை பராமரிக்ககூட அவர்கள் முன்வரவில்லை.
தந்தை பெரியார் 95 வயது வரை வாழ்ந்தார். எனவே தமிழ்நாட்டில் 95 சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி வரும் நிதியாண்டில் மொத்தம் 30 சமத்துவபுரங்களும், 2010-11ம் ஆண்டு 36 சமத்துவபுரங்களும் உருவாக்கப்பட உள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில் மகளிர் குழுக்களுக்கு 1644 கோடி ரூபாய் வங்கி கடனும், 76 கோடி ரூபாய் சுழல்நிதியும் வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டு காலத்தில் வங்கி கடனாக 4926 கோடி ரூபாய், சுழல் நிதியாக 215 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
99 சதவீதம் வட்டியை மகளிர் குழுக்கள் சரியாக செலுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு வட்டியில்லா கடன் தேவையில்லை என்றார் ஸ்டாலின்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications