இரட்டை வாக்குரிமை கோரி தலித் அமைப்பு போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: தலித் மக்களுக்கு இரட்டை வாக்​கு​ரிமை கோரி ​டெல்​லி​யில் நாடாளுமன்றம் முன்பு பிப்ரவரி மாதம் 3ம் தேதி அன்று மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தலித் விடு​தலை இயக்​க மாநில பொதுச் செயாலளர் தலித் ஞானசேகரன் அறிவித்துள்ளார். ​

தலித் விடு​தலை இயக்​க இளை​ஞ​ரணி சார்​பில் அருந்​த​தி​யர் இளை​ஞர் அர​சி​யல் அணி​வ​குப்பு மாநாடு கரூ​ரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அதன் மாநில இளை​ஞ​ரணி செயலாளர் சசிக்குமார் தலைமை வகித்தார். ​

மாநாட்டுத் தீர்மானங்களை மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வாசித்தார்.

அப்போது தலித் விடு​தலை இயக்​கத்தின் மாநில பொதுச்​ செய​லாளர் தலித் ஞானசேக​ரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நமது சமுகத்தில் தலித் மக்கள் இன்றும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளனர். அவர்களது கல்வி, வேலைவாய்பபு போன்றவற்றில் போதுமான அளிவு முன்னேற்றம் ஏற்படவில்லை.

தலித் மக்களுக்காக சுதந்திரம் அடைந்த போது டாக்டர் அம்பேத்கர் வெள்ளையர்களிடம் இரட்டை வாக்குரிமை போராடி பெற்றார். ஆனால் அதை மகாத்மா காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்து தடுத்து விட்டார். இதனால் இரட்டை வாக்குரிமை கனவு கானல் நீரானது. இரட்டை வாக்குரிமை மட்டுமே தலித் மக்களுக்கு நிரந்தர உரிமையை பெற்றுத் தரும்.

பிப்ரவரி 3ம் தேதி, டெல்​லி​யில் நாடாளுமன்றம் முன்பு எனது தலைமையில் இரட்டை வாக்கு​ரிமை கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில்​ 21 மாவட்​டங்​களி​லி​ருந்து சுமார் 2 ஆயி​ரம் பேர் பங்​கேற்க உள்ளனர்.

இரட்டை வாக்குரிமை என்பது டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவு. அதை அடைய நாங்கள் எத்தகைய உயிர் தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+