ஸ்வைன்-மகாராஷ்டிர மாஜி அமைச்சர் பலி
Subscribe to Oneindia Tamil
புனே: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அரவிந்த் துள்சிராம் காம்ளே பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார்.
மகாராஷ்டிராவின் ஒஸ்மானாபாத் தொகுதி முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் அரவிந்த் துள்சிராம் காம்ளே. இவர் 1980களில் மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் இந்த மாத ஆரம்பத்திலேயே பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்காக லத்தூரில் உள்ள லோக்மான்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பன்றிக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து புனேயில் ரூபி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பன்றிக்காய்ச்சலை குணமாக்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
57 வயதான காம்ப்ளே 1984 முதல் 1998 வரை 4 முறை எம்.பி.யாக இருந்தவர்.












Click it and Unblock the Notifications