வட கிழக்கில் நிலநடுக்கம்-கட்டிடங்கள் விரிசல்

Subscribe to Oneindia Tamil

கெளஹாத்தி: கெளஹாத்தியில் இன்று பிற்பகல் 2.32 மணியளவில் மிதமான அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மர் எல்லையை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியிருந்தது.

கெளஹாத்தி, ஷில்லாங், இம்பாலா, இடாநகர் மற்றும் வடக்கும் வங்காளப் பகுதிகளில் பூமி அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர்.

கௌஹாத்தி நகரில் நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் உள்ள அடுக்ககங்களில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டடு பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர்.

இம்பாலாவிலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் பூகம்ப பீதியடைந்து வீதிகளுக்கு ஒடிவந்தனர். இங்கு சுமார் 20 வினாடிகள் பூமி அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், கட்டிட இடிபாடுகளோ, உயிரிழப்போ எதுவும் ஏற்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஆறாவது முறையாக வடகிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதே போல வங்கதேசத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.7 என பதிவானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+