தஞ்சையில் 120 பட்டதாரி தமிழாசிரியரிகள் கைது
தஞ்சை: தஞ்சாவூரில் சாகும்வரை உண்ணா விரதம் இருக்க முயன்ற 120 வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலையில்லா பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தினர், தங்களுக்கு அரசு உடனே வேலை வழங்க கோரி தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் முன்பு நேற்று, சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.
சட்டசபையில் அறிவிக்கப்பட்டபடி வேலையில்லாத பட்டதாரி தமிழ் ஆசிரியர்களை உடனடியாக நேரடிப் பணி நியமனம் செய்ய வேண்டும், 3 ஆண்டு கால புலவர் பட்டயப் படிப்பை பட்டப்படிப்பாக தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும், தமிழாசிரியர்களே இல்லாத 6700 நடுநிலைப்பள்ளிகளில் உடனடியாக தமிழாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் போலீசார் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து பந்தலை பிரித்து எடுத்துச் சென்று விட்டனர்.
இதனால், தமிழாசிரியர்கள் வெட்டவெளியில் அமர்ந்து தங்களது உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடர்ந்தனர்.
இந்நிலையில் காலை 10 மணியளவில் உண்ணாவிரத பகுதிக்கு வந்த போலீசார் 120 வேலையில்லா தமிழாசிரியர்களையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications