ஜனவரியில் சிஆர்ஆர் உயரும்!

பணப் புழக்கத்தின் அளவை அதிகப்படுத்தும் நோக்கில் 50 புள்ளிகள் அடிப்படையில் இந்த விகிதம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"இப்போது பண ஓட்டம் மிகக் குறைவாக உள்ளது. அட்வான்ஸ் டாக்ஸ் முறா காரணமாக இந்த நிலை உள்ளது. ஆனால் இந்தப் பணம் மீண்டும் சுழற்சி முறையில் புழக்கத்துக்கு வரும்போதுதான் பணப் புழக்கம் சகஜ நிலைக்கு வரும்.. இதைக் கருத்தில் கொண்டுதான் சிஆர்ஆர் அதிகரிக்கப்படுகிறது" என்கிறார் ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கியின் ஹஸீப் ட்ராபு தெரிவித்துள்ளார்.
அதே நேரம், விரைவில் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"ஆனால் ரிசர்வ் வங்கி இந்த விகிதங்களை உயர்த்துவதால், வணிக வங்கிகளில் உடனடியாக பாதிப்பு தெரியாது. சிஆர்ஆர் உயர்த்தப்படுவதால் வணிக வங்கிகள் கடனுக்கு வட்டியை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை" என்றும் ஹஸீப் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications