ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படையினர் தாக்குதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 10 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.
சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கடுமையாக தாக்கினார்கள்.
அவர்களிடம் இருந்த மீன்கள், வலைகள், செல்போன்கள், திசை காட்டும் கருவிகள் உள்ளிட்ட நவீன பொருள்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, மீனவர்களை விரட்டியடித்தனர். இந்த தாக்குதலில் 10 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
இதனால் உயிருக்கு பயந்து ஓடி வந்த அவர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸாரிடமும், மீன்வளத்துறையினரிடமும் மீனவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications