கேரள வாகனங்கள் மறிப்பு போராட்டம்-வைகோ கைது

Subscribe to Oneindia Tamil

Vaiko
கம்பம்: முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே கேரளம் புதிய அணை கட்டுவதை எதிர்த்து கேரளத்துக்குச் செல்லும் வாகனங்களை மறித்து இன்று கம்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

புதிய அணை கட்டும் கேரள அரசைக் கண்டித்தும், அதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை மறிக்கும் போராட்டத்தை இன்று வைகோ நடத்தினார்.

இன்று காலை கம்பம் வ.ஊ.சி. திடலில் வைகோ தலைமையில் கூடிய ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்களும் 5 தென் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் ஊர்வலமாக குமுளி-கம்பம்மெட்டு மலைப் பாதைக்குச் சென்று மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். அனைவரும் வேன்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

முன்னதாக வைகோ பேசுகையில், மத்திய அரசும், கேரள அரசும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டன. பெரியார் அணை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தமிழக அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் அணைகள் பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றியது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. ஆனால் அணைகள் பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றி கேரளா சண்டித்தனம் செய்து வருகிறது. இது இந்திய இறையாண்மைக்கே எதிரானது. இதை மத்திய அரசு ஏன் தட்டிக் கேட்கவில்லை.

எனவே, நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள கேரளாவுக்கு பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும்.

முல்லைப் பெறியாறு அணையை உடைக்கும் சதி வேலையில் கேரளா ஈடுபட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+