நெல்லை- சென்னைக்கு பகல் நேர ரயில் விட திட்டம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை நெல்லையிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ஒரு ரயில் விட ரயில்வே திட்டமிட்டுள்ளது.

மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது நேற்று குரூவாயூர் எக்ஸ்பிரஸ் மூலம் நெல்லை வந்தார். பின்னர் நெல்லை ரயில் நிலைய புதிய கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அகமது பேசுகையில்,

நெல்லை ரயில் நிலையத்தில் ரூ.4.5 கோடி செலவில் வெளிநாடுகளில் உள்ளதுபோல் லிப்ட் வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலம், கூடுதலாக ஏசி வசதியுடன் கூடிய அறை, ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.

சென்னை, திருச்சி, மதுரை ரயில் நிலையங்களை போன்று நெல்லை ரயில் நிலையமும் நவீனமாக்கப்படும். ரயில் நிலையம் முன்பு பெரிய பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நகரங்களில் ஓன்றாக நெல்லை இருப்பதால் இப்பகுதிக்கு எல்லா வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். நெல்லை ரயில் நிலையத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.35 கோடி செலவில் புதிய ரயில் நிலைய கட்டிடம், பிட் லைன் மற்றும் 3,4வது பிளாட் பாரங்களை விரிவுபடுத்துதல், பயணிகள் அமருவதற்கான நவீன வசதிகளுடன் கூடிய அறைகள், விஜபி போன்ற அறைகள் பணிகள் முடிவடைந்துள்ளன.

மேலும் ரூ.4.5 கோடி செலவில் வெளிநாடுகளில் உள்ளதுபோல லிப்ட் வசதிகளுடன் கூடிய நடைபாதை மேம்பாலம், கூடுதலாக ஏசி வசதிகளுடன் கூடிய அறை ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. மத்திய அரசு பொறுப்பேற்ற பின் 71 புதிய. ரயில்கள் விடுவதற்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதில் 14 ரயி்ல்கள் இயக்கப்பட்டுள்ளன. படிப்படியாக அனைத்து ரயில்களும் இயக்கப்படும். நெல்லையில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்குவதற்கான திட்டம் பரீசிலினையில் உள்ளது.

மதுரை-நெல்லை இரட்டை ரயில் பாதை பணி, மின் மயமாக்குதல் ஆகிய திட்டங்களும் பரீசிலனையில் உள்ளது. மின் மயமாக்குதலுக்கு அதி முதலீடு தேவைப்படுவதால் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணி விரைந்து நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரம்-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+