ஏமனில் படிப்பதற்காக மாணவர் விசாவில் வந்த நைஜீரியர் முத்தல்லாப்

Subscribe to Oneindia Tamil

Abdul Mutallab
சானா: அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞர் உமர் பாரூக் அப்துல்முத்தல்லாப் ஏமன் தலைநகர் சானாவில் உள்ள அரபி மொழிக் கல்லூரியில் படிக்க மாணவர் விசாவில் வந்ததாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஏமன் வந்துள்ளார் முத்தல்லாப். இதற்கு முன்பு கடந்த 2004ம் ஆண்டு ஏமன் வந்த அவர் ஒரு வருடம் அங்கு தங்கியிருந்தார். அப்போது அவரிடம் அமெரிக்க தூதரகம் வழங்கிய விசா இருந்தது. மேலும், சில நாடுகளின் விசாக்களும் அவரிடம் இருந்தது.

இதற்கிடையே, முத்தல்லாபுக்கு இங்கிலாந்து தடை விதித்திருப்பது குறித்தும், அமெரிக்க கண்காணிப்புப் பட்டியலில் முத்தல்லாப் இருப்பதும் தங்களுக்குத் தெரியாது, யாரும் தெரிவிக்கவில்லை என்று ஏமன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏமன் செய்தித் துறை அமைச்சர் ஹசன் அல் லாவ்சி கூறுகையில், இங்கிலாந்து எங்களுக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்கவலி்லை. அதேபோல அமெரிக்காவிடமிருந்தும் எங்களுக்குத் தகவல் ஏதும் வரவில்லை.

ஆனால் முத்தல்லாப் கண்காணிப்புப் பட்டியலில் இருப்பதை அமெரிக்கா எங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். பிற நாடுகளிடம் மட்டும் அமெரிக்கா சரியாக செயல்படுகிறது. ஆனால் எங்கள் விஷயத்தில் அது பாரபட்சமாக நடந்து கொள்கிறது.

இருப்பினும் எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க மாணவர் விசாக்களை வழங்குவதில் பல்வேறு புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம்.

ஏமனில் கிட்டத்தட்ட 12 இங்கிலாந்து முஸ்லீம் மாணவர்கள், தீவிரவாதப் போக்குடையவர்கள் இருப்பதாக இங்கிலாந்து கூறுகிறது. அப்படி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து அரசுக்கு ஒத்துழைப்பு தருவோம்.

அந்த மாணவர்களுடைய பெயர்கள் அடங்கிய பட்டியல் இருந்தால் அதை இங்கிலாந்து அரசு எங்களுக்கு அனுப்பி வைத்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இங்கு யாரும் அடைக்கலம் புக முடியாது. அதை அனுமதிக்கவும் மாட்டோம் என்றார் அவர்.

ஏமனுக்கு உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரபி மொழி கற்க வருகின்றனர். இங்கு செலவு குறைவு என்பதால் அதிக அளவிலானோர் இங்கு வருகின்றனர். ஆனால் அல் கொய்தாவுடன் தொடர்பு கொள்வதற்காகவே பலரும் வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே முத்தல்லாப் சேர்ந்து படித்த அரபிப் பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்கள் கூறுகையில், முத்தல்லாப் வெளிப்படையாகப் பேசக் கூடியவராக இருந்தார். அவருடைய பேச்சில் தீவிரவாதம் எதுவும்

அதேசமயம், காஸா பகுதியில், இஸ்ரேல் படையினர் நடத்திய கொலை வெறித் தாக்குதல் குறித்து அவர் கோபமாக இருந்தார் என்றனர்.

இதற்கிடையே, சானாவுக்கு வெளியே உள்ள இமான் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களில் பெரும்பாலானோர் தீவிரவாத இயக்கங்களில் சேருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

ஏமன் நாட்டில் அல் கொய்தாவினரின் நடமாட்டம் பிரசித்தமானது. இதுகுறித்து ஏமன் வெளியுறவு அமைச்சர் அபு பக்கீர் அல் குர்பி கூறுகையில், ஏமனில் நூற்றுக்கணக்கான அல் கொய்தாவினர் இருக்கின்றனர். அவர்கள் எத்தனை பேர் என்பதை தெளிவாக கூற முடியாது 300 பேராக இருக்கலாம்.

அதேசமயம், அப்துல்முத்தல்லாப் போன்றவர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மிகப் பெரிதாக இருக்கலாம்.

இந்த மாதத் தொடக்கத்தில் அல் கொய்தாவினரின் முகாம்கள் சிலவற்றை ஏமன் படையினர் தாக்கி அழித்தனர். அப்போது ஒரு முகாமில் மட்டும் 24 பேர் உயிரிழந்தனர். ஆனால் இது 49 பேர் என்று உள்ளூர் மக்கள் கூறினர் என்றார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் ஏமனில் கால் பதித்தது அல் கொய்தா. இதுகுறித்து ஜனவரி மாதம் அது வீடியோ செய்தி மூலம் வெளியுலகுக்கு அறிவித்தது.

உண்மையில் சவூதி அரேபியில் செயல்பட்டு வந்த அல் கொய்தாவினரையும், ஏமன் பிரதிநிதிகளையும் இணைத்து இந்தப் பிரிவை உருவாக்கியது அல் கொய்தா.

ஏமன் நாட்டின் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில்தான் அல் கொய்தாவினர் தங்களது முகாம்களை அமைத்துள்ளனர். இந்தப் பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் அவ்வளவாக இல்லாதவையாகும்.

ஏமன் பிரிவின் துணைத் தலைவராக இருப்பவர் சையத் அல் ஷேஹ்ரி என்பவராவார். இவர் அமெரிக்காவின் குவான்டனாமோ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சானாவில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இவருக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவருடைய சகோதரரும் குவான்டானோமா சிறையில் இருந்து விடுதலையானவர். இவர் இந்த ஆண்டு சவூதியில் நடந்த வேட்டையின்போது கொல்லப்பட்டு விட்டார்.

குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தது முதலே, ஏமனில் தீவிரவாதிகள் நடமாட்டம் தொடங்கி விட்டது. சதாம் ஹூசேனை முன்பு ஏமன் நாடு ஆதரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+