பட்டபகலில் நடுரோட்டில் விவசாயி வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

திசையன்விளை: திசையன்விளை அருகே நடுரோட்டில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள மிட்டாதார் குளத்தை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மூத்த மனைவி இறந்து விட்டதால் 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.

அவரும் சில காலம் செல்லப்பாவுடன் வாழ்ந்து விட்டு பிரிந்து சென்று விட்டார். இதை தொடர்ந்து உவரி அருகேயுள்ள வெம்மணன் குடியை சேர்ந்த சுயம்புகனி என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார்.

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் பிளஸ் 1 படித்து வருகிறார். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள செல்லப்பாவுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை அவர் தோட்டத்துக்கு சென்று விட்டு 6 மணியளவில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

மிட்டாதார் குளம் பாலம் அருகே வந்தபோது கையில் அரிவாளுடன் 3 பேர் கும்பல் அவரை வழி்மறித்து வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து செல்லப்பா இறந்தார். அதன்பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி வி்ட்டது.

அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் டிரைவர் ஒருவர் செல்லப்பா நடுரோட்டில் பிணமாக கிடப்பதை பார்த்து மி்ட்டாதார் குளத்தில் உள்ள பொதுமக்களிடம் கூறினார். அதன்பின் திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் செல்லப்பாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+