பழநி கோயில் கோபுர கலசம் விழுந்ததால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

Palani Temple
பழநி: பழநி மலைக்கோயிலில் தெற்கு பிரகார கோபுர கலசம் திடீரென கீழே விழுந்ததால் கோயில் அதிகாரிகளும், பக்தர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பழநி மலைக்கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் கூறுகையில், 'பழநி மலைக்கோயில் தெற்கு பிரகாரத்தில் 10 அடி உயர கோபுரத்தில் தலா ஒரு அடி உயரமுள்ள மூன்று கலசங்கள் உள்ளன.

இடது பக்கத்தில் உள்ள கான்கிரீட் கலசம் சமீபத்திய மழையால் கீழே விழுந்து விட்டது. இந்த கலசம் தற்போது அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, மார்கழி மாதம் என்பதால் சிறப்பு பூஜை செய்யக்கூடாது என்பதால், தைமாதம் சிறப்பு பூஜை செய்து அக்கலசம் மீண்டும் அதே கோபுரத்தில் வைக்கப்படும்' என்றார்.

இவ்வாறு கோபுர கலசம் விழுந்தது, அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்து இருப்பதை உணர்த்தும் அறிகுறி என இப்பகுதி ஜோதிடர்கள் சிலர் கூறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+