சாமியார் ஸ்ரீகுமார் ஷீரடி கோவிலி்ல் பதுங்கல்?
சென்னை: கற்பழிப்புப் புகாரில் சிக்கி தலைமறைவாக இருக்கும் சென்னை சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண், ஸ்ரீகுமார் மீது கற்பழிப்புப் புகார் கொடுத்துள்ளார். தன்னை சாமியார் இரண்டு இடங்களில் வைத்து மொத்தம் 50 முறை கற்பழித்தார் என்று அவர் திகில் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்க வருமாறு சாமியாரை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. மாறாக அவர் சென்னையை விட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடிக்க முடியாமல் போலீஸார் பெரும் டென்ஷனில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது அவர் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் தங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அங்கு தியானத்திலும், மெளன விரதத்திலும் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஷீரடி செல்ல போலீஸ் படை தயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications