கார்ட்டூனிஸ்ட்டை தாக்க முயற்சி-சோமாலியர் கைது

Subscribe to Oneindia Tamil

ஸ்டாக்ஹோம்: கடந்த 2005ம் ஆண்டு நபிகள் நாயகம் குறித்து கார்ட்டூன் வெளியிட்ட கார்ட்டூனிஸ்ட் மீது நடத்தப்படவிருந்த தீவிரவாதத் தாக்குதலை டென்மார்க் போலீஸார் தடுத்துள்ளனர்.

2008ம் ஆண்டு நபிகள் நாயகம் குறித்து கார்ட்டூன் வெளியிட்டு டென்மார்க் கார்ட்டூன் கலைஞர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த கார்ட்டூனை வெளியிட்ட பத்திரிக்கை அலுவலகத்தைத் தாக்க திட்டமிட்டிருந்ததாக கூறி சமீபத்தில் அமெரிக்காவில் டேவிட் கோல்மேன் ஹெட்லி மற்றும் ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

இந் நிலையில் சம்பந்தப்பட்ட கார்ட்டூன் கலைஞர் மீது நடத்தப்படவிருந்த தீவிரவாத தாக்குதலை டென்மார்க் போலீஸார் முறியடித்துள்ளனர்.

அந்தக் கார்ட்டூன் கலைஞரின் பெயர் குர்ட் வெஸ்டர்கார்ட். இவரது வீடு ஆர்ஹஸ் நகரில் உள்ளது. நேற்று இங்கு 28 வயதான சோமாலியாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் கையில் கத்தி மற்றும் கோடாலியுடன் குர்ட் வீட்டுக்குள் புகுந்தார்.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸார் அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீஸாரைத் தாக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அவரை சுட்டுப் பிடித்துள்ளனர்.

இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் முயற்சி என்று போலீஸார் கூறியுள்ளர். சம்பந்தப்பட்ட நபருக்கு சோமாலிய தீவிரவாத அமைப்பான அல் ஷபாப் மற்றும் அல் கொய்தா ஆகியவற்றுடன் தொடர்பு உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+