கட்டபொம்மன் பேனர் அவதிப்பு-முற்றுகை
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: விருதுநகர் அருகே கட்டபொம்மன் பேனர் சேதப்படுத்தப்பட்டதால், பிரச்சினை உருவாகி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.ஆர் நகர் உள்ளது. இங்கு கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனை கட்டபொம்மன் பேரவை மற்றும் ராஜகம்பள நாயக்கர் சமூகத்தினர் வைத்திருந்தனர்.
இதனை நேற்று இரவு சமூக விரோதிகள் அவமதிப்பு செய்தனர். இதனை கண்டித்து இன்று இப்பகுதியை சேர்ந்தவர்கள் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications