தூத்துக்குடியை வட்டமிட்ட ஹெலிகாப்டரால் பீதி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மர்மமான முறையில் ஹெலிகாப்டர் ஒன்று மூன்று முறை வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் இன்று பகல் 11 மணி அளவில் ஹெலிகாப்டர் ஓன்று தாழ்வாக பறந்து சென்றது. இதனை பொதுமக்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் தொடர்ந்து அரை மணி நேரத்திற்குள் அந்த ஹெலிகாப்டர் 3 தடவை மேல் கிழக்கு, மேற்காக தாழ்வாக பறந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய ராணுவம் மற்றும் கடலோர காவல் படை, கப்பல் படை ஆகியவற்றில் வழக்கமாக பயன்படுத்தும் ஹெலிகாப்டர் போல் இல்லாமல் வெள்ளை, சிவப்பு நிறத்துடன் விஜபிக்கள் பயன்படுத்தும் சொகுசு ஹெலிகாப்டர் போன்று காணப்பட்டது.
மேலும் அந்த ஹெலிகாப்டர் எதற்காக தூத்துக்குடியில் வட்டமிட்டது, என்றும் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் தெரியவில்லை என்றும் இது தொடர்பாக கடற்படையிடம் விசாரித்து கூறுவதாகவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications