ஏ.சி. ரவி வசம் செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணி
சென்னை: கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து தமிழ் அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டின் பாதுகாப்பு கமிட்டி ஒருங்கிணைப்பாளராக சென்னை நகர போலீஸ் கூடுதல் கமிஷனர் எம்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர கூடுதல் கமிஷனர் பதவியுடன் இந்த பொறுப்பை கூடுதலாக அவர் கவனித்துக் கொள்வார்.
செம்மொழி மாநாட்டின் தனி அதிகாரி கே.அலாவுதீன் மற்றும் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளோடு இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள், உளவுப் பணிகள் ஆகியவற்றையும் அவர் கவனித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications