போலீஸ் முன் நிர்வாண போராட்டம் நடத்திய கைதி!
சேலம்: சேலம் மத்திய சிறைக் கைதி ஒருவர், நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜராஜசோழன் (32) மீது 51 திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பத்து வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு, 40 ஆண்டு சிறை தண்டனையில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊட்டியைச் சேர்ந்த ஜீவா என்ற கைதியும் ராஜராஜசோழனும் கஞ்சா வாங்குவது தொடர்பாக மோதிக் கொண்டார். இதனால், ராஜராஜசோழன் தனி செல்லில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக, ராஜராஜசோழனை, சென்னை பூந்தமல்லிக்கு அழைத்துச் செல்ல, போலீசார் தயாரானபோது, அதற்கு வரமறுத்த ராஜராஜசோழன், திடீரென, தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றபடி போராட்டம் நடத்தினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை சமாதானம் செய்து ஆடைகளை அணியச் செய்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications