திருப்பதி அருகே விபத்து - 6 பக்தர்கள் உள்பட 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Tirupathi
திருப்பதி: திருப்பதி அருகே மல்லவரம் என்ற இடத்தில் நடந்த கோர சாலை விபத்தில் லக்னோவைச் சேர்ந்த 6 பக்தர்கள், வேன் டிரைவர் ஆகியோர் உயிரிழந்தனர்.

லக்னோவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குடும்பத்தினர் திருப்பதிக்கு புனிதப் பயணமாக சென்னையிலிருந்து வேன் ஒன்றை அமர்த்திச் சென்று கொண்டிருந்தனர்.

இன்று காலை மல்லவரம் கிராமப் பகுதியில் வேன் வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.

இதில் வேனில் பயணம் செய்த மீரா (40), சேவா பான்டே (46), ஆனந்த் (10), ரித்தி (7), சுனில் (45), வேன் டிரைவர் ராஜேஷ் (35) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த இன்னொரு பெண்ணின் அடையாளம் தெரியவில்லை.

நான்கு பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 22ம் தேதி முதல் இவர்கள் பல்வேறு கோவில்களுக்கும் புனித யாத்திரையாக சென்று வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+