18 மாதங்களில் 25 தயாரிப்புகளை வெளியிட அசோக் லேலண்ட் திட்டம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து நிறுவன நிர்வாக இயக்குநர் சேஷசாயி செய்தியாளர்களிடம் பேசுகையில், அசோக் லேலண்ட் நிறுவனம் உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய டிரக் தயாரிப்புப் பிரிவை தொடங்கியுள்ளது. அங்கிருந்து வருகிற ஏப்ரல் மாதம் முதல் அடுத்த 18 மாதங்களுக்கு மொத்தம் 25 தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொன்றும் ஒரு வகையில் வித்தியாசமானதாக இருக்கும்.
தொடக்கத்தில் 50,000 டிரக்குகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டுக்குள் எங்களது அனைத்து உற்பத்திப் பிரிவுகளையும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளோம் என்றார் சேஷசாயி.












Click it and Unblock the Notifications