அழகிரி பெயரில் பேரவை- கட்சியினருக்கு திமுக எச்சரிக்கை
சென்னை: மத்திய அமைசசர் மு.க.அழகிரி பெயரில் அமைக்கப்பட்டுள்ள பேரவையுடன் திமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுக தலைமைக் கழகம் எச்சரித்துள்ளது.
ரிஷியவந்தியம் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ மரூர் தர்மலிங்கம் என்பவர் அகில இந்திய மு.க.அழகிரி பேரவை என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
அழகிரியை பிரதமராக்குவோம், ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று இந்த பேரவை உறுதி பூண்டுள்ளது. இணையதளம் ஒன்றையும் தொடங்கவும் தர்மலிங்கம் திட்டமிட்டுள்ளார்.
திமுகவினர் மத்தியில் இந்தப் பேரவை அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. தலைமைக் கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
மரூர்.தர்மலிங்கம் என்பவர் அகில இந்திய மு.க.அழகிரி பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கி, மாநில அளவில் நிர்வாகிகளை நியமித்து வருவதாக தலைமைக் கழகத்திற்கு தகவல்கள் வந்துள்ளன.
இதுபோன்ற கட்சி சட்டதிட்டங்களுக்கு முரணான, ஆதாயம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களோடு கட்சி தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும், அப்படி தொடர்பு வைத்துக்கொண்டால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications