டெல்லி- விமான போக்குவரத்து சகஜமானது - காஷ்மீருக்கு ரத்து
டெல்லி: டெல்லியில் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்ட விமான சேவைகள் இன்று சகஜ நிலைக்கு திரும்பின. எனினும், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி விமான நிலையத்தில் கடும் பனி மூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக நேற்று உள்நாட்டு விமான போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
சுமார் 45 புறப்பாடுகளும் 25 வருகைகளும் ஐந்து மணி நேரம் வரை தாமதமாயின. அடர்த்தியான பனிப்பொழிவு மற்றும் அதனால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் 17 சர்வதேச விமானங்கள் வேறு மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டன.
நேற்று நள்ளிரவு வரை இதேநிலைமை நீடித்ததாகவும், இன்று காலை முதல் வானம் தெளிவடைந்து தற்போது விமான போக்குவரத்து சகஜ நிலையில் இயங்கிக் கொண்டிருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், அமிர்தசரஸ், லே, ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் மோசமான வானிலை நிலவுவதால், டெல்லியில் இருந்து அப்பகுதிகளுக்கு செல்லும் 6 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிகாலையில் புறப்பட்ட சில விமானங்கள் தாமதமாக சென்றன.
டெல்லியில் வெப்பநிலை இன்று குறைந்தபட்சம் 9.5 டிகிரி செல்ஷியசும், அதிகபட்சமாக 15 டிகிரி வரை செல்லும் என்றும் வானிலை ஆய்வு மையத்தகவல் தெரிவிக்கிறது.
விமான ஓடுதளத்தில் நேற்று 150 மீட்டருக்கு அப்பால் எதுவும் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. தற்போது 2,000 மீட்டர் வரை தெளிவாக காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் போக்குவரத்தும் பாதிப்பு
கடும் பனிப்பொழிவு காரணமாக 13 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி-ஜலந்தர் எக்ஸ்பிரஸ், சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ், ஷான்-இ-பஞ்சாப் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 13 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று இரவு காணப்பட்ட கடுமையான பனிப்பொழிவால் இன்று டெல்லியை வந்தடையும் 49 ரயில்கள் தாமதமாக வந்தன. இதன் காரணமாகவும் சில ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications